மதுரையில் ரவுடி வெட்டிக்கொலை

1

மதுரை: பழைய ஊராட்சிமன்ற அலுவலகத்தில் இளைஞர் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில், மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். போலீசார் வழக்குப்பதிவு விசாரித்தனர். கொலை செய்யப்பட்டவர் சடச்சி அம்மன் நகரைச் சேர்ந்த 'குட்டிச்சாக்கு' எனும் சூர்யா என்பது தெரிய வந்தது.

இவர் மீது கொலை, அடிதடி என 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பழைய ஊராட்சி அலுவலக கட்டடத்தில் சூர்யா மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களால் ரவுடி சூர்யாவை கொடூரமாக தாக்கியுள்ளது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சூர்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக ரவுடி சூர்யா வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Advertisement