நடை ரோந்தால் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்: எஸ்.பி., கவுதம் கோயல் தகவல்

சிவகாசி: '' நடை ரோந்து மூலமாக கள நிலவரத்தை அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் குற்றவாளிகளுக்கு அச்சமும், மக்களிடையே நம்பிக்கையும் ஏற்படும்.,'' சிவகாசியில் நடை ரோந்து பணியில் ஈடுபட்ட எஸ்.பி., கவுதம் கோயல் தெரிவித்தார்.

அவர் இன்று (நவ.,2) இரவு சிவகாசி பஸ் ஸ்டாண்டில் இருந்து பி.கே.எஸ்.ஏ. ஆறுமுகம் ரோடு, நான்கு ரத வீதிகள் வழியாக நடை ரோந்தில் ஈடுபட்டு மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது, கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடையவர்களை கண்காணித்து வருகிறோம். சிறையில் இருந்து ஜாமீனில் வரும் குற்றவாளிகளை கண்காணித்து வருகிறோம். ஏதாவது தவறு நடந்தால் மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் சொல்ல வேண்டும். தொடர் விடுமுறைக்கு வெளியூர் செல்வோர் அருகே உள்ள போலீஸ் ஸ்டேஷனில் தகவல் தெரிவிக்க வேண்டும்.

சிவகாசி பஸ் ஸ்டாண்டில் 12 கண்காணிப்பு கேமராக்கள், நகரில் நான்கு இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணித்து வருகிறோம். 24 மணி நேரமும் வாகன தணிக்கை நடைபெறும், என்றார். டி.எஸ்.பி., அனில் குமார், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்கள் , போலீசார் உடன் வந்தனர்.

Advertisement