காரைக்கால் கடலில் நீர் சுழல் :சமூக வலைத்தளத்தில் வைரல்
காரைக்கால்: காரைக்கால் கடல் பகுதியில் திடீர் நீர்ச்சுழல் ஏற்பட்ட சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக காரைக்கால் மாவட்டத்திற்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில்,காரைக்கால் கடல் பகுதியில் திடீரென உருவான நீர்ச்சுழல் மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று (நவ.,2) காரைக்கால் மாவட்டத்தில் இருந்து சுமார் 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள், கடலின் நடுவே திடீரென உருவான சூறாவளிக் காற்றை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
கடல் நீரில் வெண்மையான புகை போன்ற தோற்றத்தில் மேலெழும்பி சுழல் வேகமாக நகர்ந்துள்ளது.இந்த அரிய காட்சியை மீனவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர்.கடலின் நடுவே நீரானது சுழன்று மேலெழும் காட்சி தெளிவாகப் பதிவாகியுள்ளது. இதை படம் பிடித்த மீனவர்கள் அச்சத்துடன் பேசுவது இடம் பெற்றுள்ளது.பின்னர் மீனவர்கள் பாதுகாப்பாக கரைத்திரும்பினர்.தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்
-
பிரபல ரவுடி குண்டாசில் கைது
-
போக்குவரத்து விதி மீறிய 25 ஆயிரம் பேருக்கு அபராதம்: சீனியர் எஸ்.பி., திவ்யா
-
அரசு கல்லுாரி டாக்டர் மீது மருத்துவ மாணவியர் புகார்
-
விழாவுக்கு மேயரை அழைக்காத கமிஷனர் அமைச்சர் முன் தி.மு.க., கவுன்சிலர் ‘லடாய்’
-
சிறு தொழிலுக்கு உதவ மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்க அரசு உத்தரவு
-
அரசு காப்பீட்டில் ‘டயாலிசிஸ்’ கட்டணம் கேட்டு அலைக்கழிப்பு