பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காத அவலம்
புதுச்சேரி: புதுச்சேரி அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டு கழக ஊழியர்களுக்கு மூன்று மாதங்களாக சம்பளம் வழங்காததால் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
புதுச்சேரி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகத்தில் ஒரு சிறப்பு அதிகாரி மற்றும் 52 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 32 சீனியர் ஊழியர்கள் மற்றும் 20 பேர் தின கூலி ஊழியர்கள்.
இந்த துறையில் கடந்த மூன்று ஆண்டுகளாக மேலாளர் நியமிக்காமல் உள்ளனர். மேலும் இந்த துறையை சேர்ந்த 25 ஊழியர்கள் வாய்மொழி உத்தரவாக பல்வேறு துறைகளில் டெபுடேஷ்னில் சென்று வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில் சம்பளம் பெற்று வருகின்றனர். மேலும் தற்போது தீபாவளி போனஸ் பெற்று உள்ளனர்.
ஆனால் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகத்தை சேர்ந்த டெபுடேஷனில் சென்றுள்ள ஊழியர்கள் உள்ளிட்ட 52 பேர்களுக்கும் கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்காததால் ஊழியர்கள் வாழ்வாதாரத்திற்கு சிரமப்பட்டு வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில் ஊழியர்களுக்கு தடைபட்டுள்ள மூன்று மாதத்திற்கான சம்பளத்தை வழங்கி குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும்
-
சைவம், வைணவம் பற்றி பேசிய தி.மு.க., ‘மாஜி’ மீதான வழக்கை வாபஸ் பெற்றார் பா.ஜ., கவுன்சிலர்
-
மகாதேவ் சூதாட்ட செயலி; மற்றொரு முக்கிய குற்றவாளி ரவி உப்பால் துபாயில் கைது
-
முதல்வர் வீடு அருகே பெண் குழந்தை மீட்பு
-
கீழ்ப்பாக்கத்தில் தீக்காய சிறப்பு வார்டு தொடக்கம்
-
கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் நடைமேடை நீட்டிப்பு பணி தாமதம்: ரூ.3.92 கோடி நிதி ஒதுக்கி 6 மாதமாச்சு
-
குப்பை லாரி ஓட்டுநர்கள் ‘போனஸ்’ கேட்டு போராட்டம்