மில் உரிமையாளர் துாக்கிட்டு தற்கொலை

குறிஞ்சிப்பாடி: மணிலா உடைக்கும் மில் உரிமையாளர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குறிஞ்சிப்பாடி, தச்சர் தெருவை சேர்ந்தவர் பழனி மகன் ஜோதி பிரகாஷ்,35; இவரது மனைவி யோகலட்சுமி,31; திருமணமாகி 6 ஆண்டாகும் இவர்களுக்கு 2 வயதில் மகள் உள்ளார்.

குறிஞ்சிப்பாடி புறவழிச்சாலையில், வேர்க்கடலை உடைக்கும் மில் நடத்தி வரும் ஜோதிபிரகாஷ், நேற்று காலை வழக்கம் போல் மில்லிற்கு சென்றவர் மதியம் சாப்பிட வீட்டிற்கு வரவில்லை.

சந்தேகமடைந்த அவரது மனைவி யோகலட்சுமி, தனது கணவிரின் நண்பரிடம் கூறினார். அவர், மில்லிற்கு சென்று பார்த்தபோது, ஜோதிபிரகாஷ் துாக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு திடுக்கிட்டு, அவரை காப்பாற்றி, வடலூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார்.

தகவலறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார், ஜோதிபிரகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில், தொழில் செய்வதற்காக தனியார் வங்கியில் கடன் பெற்று, அதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்த கொண்டது தெரிய வந்துள்ளது.

Advertisement