வேளாண் உதவித் திட்டத்தில் மானியம் ஆதி திராவிடர் விவசாயிகளுக்கு அழைப்பு
கடலுார்: ஆதி திராவிடர் விவசாயிகள் மின் மோட்டாருக்கான மின் இணைப்பு பெறுவதற்கு மானியம் வழங்கப்படுகிறது என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
வேளாண் உதவித் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட விவசாயிகள் 1,000 பேருக்கு தட்கல் மின் இணைப்பு வழங்க தமிழக அரசு ரூ.26.09 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தில் விவசாய உற்பத்திக்கு தேவையான மின் மோட்டார் குதிரை திறனுக்கேற்ப மின் இணைப்பு பெறுவதற்கான செலவில் 90 சதவீதம் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திடம் தாட்கோ மானியமாக வழங்கும்.
அதன்படி, 5, 7.5 மற்றும் 10 ெஹச்.பி., மின் மோட்டாருக்கான மின் இணைப்பு கட்டணத்தில் 10 சதவீதம் அதாவது ரூ.25 ஆயிரம், ரூ.27.500 மற்றும் ரூ.30 ஆயிரத்தை பயனாளி பங்கு தொகையாக செலுத்த வேண்டும். மீதி தொகையைான முறையே ரூ.2.25 லட்சம், ரூ.2.47 லட்சம், ரூ.2.70 லட்சத்தை தாட்கோ மானியமாக வழங்கும்.
பயனாளி ஆதிதிராவிடராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும். விவசாய நிலம் விண்ணப்பதாரரின் பெயரில் சொந்தமாக இருப்பதுடன், பட்டாவம் இருக்க வேண்டும். நிலத்தில் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு இருக்க வேண்டும்.தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் மின் இணைப்பு கோரி பதிவு செய்திருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் ஏற்கனவே தாட்கோ திட்டங்களின் கீழ் பயன் அடைந்தவராக இருக்கக்கூடாது. தகுதியானவர்கள் https://tahdco.com/ என்ற தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும்
-
சைவம், வைணவம் பற்றி பேசிய தி.மு.க., ‘மாஜி’ மீதான வழக்கை வாபஸ் பெற்றார் பா.ஜ., கவுன்சிலர்
-
மகாதேவ் சூதாட்ட செயலி; மற்றொரு முக்கிய குற்றவாளி ரவி உப்பால் துபாயில் கைது
-
முதல்வர் வீடு அருகே பெண் குழந்தை மீட்பு
-
கீழ்ப்பாக்கத்தில் தீக்காய சிறப்பு வார்டு தொடக்கம்
-
கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் நடைமேடை நீட்டிப்பு பணி தாமதம்: ரூ.3.92 கோடி நிதி ஒதுக்கி 6 மாதமாச்சு
-
குப்பை லாரி ஓட்டுநர்கள் ‘போனஸ்’ கேட்டு போராட்டம்