போலீஸ் வாகனங்கள் வரும் 12ம் தேதி ஏலம்
கடலுார்: கடலுார் மாவட்ட போலீஸ் துறையில் பயன்படுததி கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் வரும் 12ம் தேதி ஏலம் விடப்படுகிறது.
எஸ்.பி., அலுவலக செய்திக்குறிப்பு: கடலுார் மாவட்ட போலீஸ் துறையில் பயன்படுத்தி கழிவு செய்யப்பட்ட 4 சக்கர வாகனங்கள்–11, இருசக்கர வாகனங்கள்–8 என, மொத்தம் 19 வாகனங்கள் வரும் 12ம் தேதி காலை 10:00 மணிக்கு ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்படுகிறது.
இந்த வாகனங்கள் ஆயுதப்படை மோட்டார் வாகனப் பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் வரும் 11ம் தேதி காலை 10:00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வாகனங்களை பார்வையிடலாம்.
வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர் வரும் 11ம் தேதியே இருசக்கர வாகனங்களுக்கு 2,000 ரூபாய், 4 சக்கர வாகனங்களுக்கு 5,000 ரூபாய் முன்பணம் செலுத்தி பெயரை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.
ஏலம் எடுத்தவுடன் முழுத் தொகை மற்றும் அதற்குண்டான ஜி.எஸ்.டி., வரி இருசக்கர வாகனங்களுக்கு 12 சதவீதம், 4 சக்கர வாகனங்களுக்கு 18 சதவீதம் முழுவதையும் அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.