பத்திரக்கோட்டை அரசு பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு
நடுவீரப்பட்டு: பத்திரக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் பயன்பாட்டை தடுப்பது மற்றும் போதை பழக்கத்தின் தீமைகள் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மீனாம்பிகை தலைமை தாங்கினார். நடுவீரப்பட்டு இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களிடம் விளக்கி பேசினர்.
மேலும் மாணவர்களுக்கிடையே நடந்த போதை பொருட்கள் குறித்த கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement