மதுப்பாட்டில் விற்றவர் கைது

பரங்கிப்பேட்டை: புவனகிரியில், டாஸ்மாக் மதுப்பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றவரை, போலீசார் கைது செய்தனர்.

புவனகிரி பங்களா பகுதியில், டாஸ்மாக் மதுப்பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பதாக தகவல் வந்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, டாஸ்மாக் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றுக்கொண்டிருந்த, மேல் குறியாமங்களம் சண்முகா பிரியா நகரை சேர்ந்த மணிகண்டனை, 24; கைது செய்தனர். அவரிடம் இருந்து, 12 குவாட்டர் மதுப் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement