சாலை சீரமைப்பு பணி: ஆணையர் ஆய்வு

புதுச்சேரி: கூனிச்சம்பட்டு மணக்குள விநாயகர் நகரில் மழையால் பாதிக்கப்பட்ட சாலைகள் சீரமைக்கும் பணியினை ஆணையர் எழில்ராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மண்ணாடிப்பட்டு தொகுதி கூனிச்சம்பட்டு, மணக்குள விநாயகர் நகரில் சமீபத்தில் பெய்த கனமழையால் அப்பகுதி சாலைகள் சேதமடைந்து, மழைநீர் தேங்கி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது. புகாரின் பேரில், அமைச்சர் நமச்சிவாயம் உடனடியாக மழைநீர் தேங்கிய சாலையை சீரமைக்க கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில், மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளில் மழைநீர் தேங்குவதைத் தடுக்கும் வகையில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து மூலம் தற்காலிகாக 'கிராவல் மண்' கொட்டப்பட்டு சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இப்பணிகளை கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாதவாறு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதில், கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் உடனிருந்தனர்.

Advertisement