ஐ.டி.ஐ., மாணவியை தாக்கிய வாலிபர் கைது

கடலுார்: அரசு ஐ.டி.ஐ., மாணவியை வழிமறித்து தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார், கே.என்.பேட்டையைச் சேர்ந்தவர் மணிவண்ணன் மகன் ஆகாஷ்,20; இவர், நேற்று முன்தினம் கடலுார் அரசு மகளிர் ஐ.டி.ஐ.,யில் முதலாமாண்டு பயிலும் 16 வயது மாணவியை, செம்மண்டலம் பஸ் நிறுத்தம் அருகில் வழிமறித்து காதலிக்க வற்புறுத்தினார்.

மாணவி மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரமடைந்த ஆகாஷ், மாணவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில், கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து ஆகா ைஷ கைது செய்து, விசாரிக்கின்றனர்.

Advertisement