துார் வாராத புதுார் 'செக்டேம்': தண்ணீர் சேமிப்பதில் சிக்கல்
கோத்தகிரி:கோத்தகிரி புதுார் 'செக்டேம்' துார் வாரப்படாமல் உள்ளத்தால், தண்ணீர் சேமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கோத்தகிரி - கோடநாடு சாலையில் கேர்பெட்டா புதுார் பகுதியில், வன விலங்குகள் தண்ணீர் பருக ஏதுவாக செக்டேம் கட்டப்பட்டுள்ளது. வனப்பகுதியில் உற்பத்தியாகும் தண்ணீர், இங்கு சேமிக்கப்படுகிறது. வறட்சி நாட்களில் இந்த தண்ணீரை வனவிலங்குகள் பயன்படுத்துகின்றன.
தவிர, கோத்தகிரி நகரப் பகுதியில் வறட்சி நாட்களில் தட்டுப்பாடு நிலவும் போது, இந்த தண்ணீர் குடிநீராக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நீண்ட நாட்களாக, செக்டேம் துார் வாரப்படாமல் உள்ளதால், காட்டு செடிகள் ஆக்கிரமித்து, ஆழமும், அகலமும் குறைந்துள்ளது.
இதனால், மழை நீரை முழுமையாக சேமிக்க முடியாத நிலை உள்ளதால், வறட்சி நாட்களில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர், செக்டேமை தூர்வார நடவடிக்கை எடுப்பது அவசியம்.
மேலும்
-
ஆந்திராவுக்கு முதலீடுகள் டேக் டைவர்சன்; விஜய் படத்தை கூறி பழனிசாமி விமர்சனம்
-
அரசு கட்டிக்கொடுத்த அரைகுறை வீடு: கதவு கூட இன்றி இருளர் மக்கள் அவதி
-
தினமும் ரூ.15 ஆயிரத்துக்கு டீ, மேகி விற்கும் வியாபாரி
-
குற்றவாளிகளை பூதக்கண்ணாடி வைத்து கண்டுபிடிக்கும் உதயநிதி: அந்துமணி பதில்கள்
-
பிரியங்காவை புறக்கணிக்கும் ராகுல்: பா.ஜ., குற்றச்சாட்டு
-
ஆந்திராவில் கரையை கடக்க துவங்கியது முரசு புயல்: வெளுத்து வாங்கும் கனமழை; தமிழகத்திலும் அலர்ட்!