யுஜிசி நெட் டிசம்பர் தேர்வு: விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய நவ. 4 வரை அவகாசம்!
புதுடில்லி: யுஜிசி 'நெட்' டிசம்பர் 2026 தேர்வுக்கான விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கான இணையதள வசதி இன்று (நவம்பர் 2) தொடங்கியுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களின் விவரங்களைத் திருத்திக் கொள்ள நவம்பர் 4-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் தகுதி மற்றும் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கான யுஜிசி 'நெட்' தேர்வை, தேசியத் தேர்வுகள் முகமை (NTA) நடத்தி வருகிறது. நடப்பு ஆண்டிற்கான டிசம்பர் பருவத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்களது விண்ணப்பப் படிவங்களில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அவற்றைச் சரிசெய்து கொள்ள தற்போது வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கடைசி நேரம் எப்போது?
விண்ணப்பத்தை திருத்த வசதி (Correction Window) நவம்பர் 4-ஆம் தேதி, இரவு 11:50 மணி வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் என 'என்டிஏ' அறிவித்துள்ளது. எனவே, தேர்வர்கள் கடைசி நேரம் வரை காத்திருக்காமல், முன்கூட்டியே விண்ணப்பங்களைச் சரிபார்த்து உரிய மாற்றங்களைச் செய்துகொள்ளலாம்.
எவற்றையெல்லாம் திருத்தலாம்?
என்டிஏ வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி, குறிப்பிட்ட சில விவரங்களில் மட்டுமே திருத்தம் செய்ய முடியும். குறிப்பாக, தேர்வரின் பெயர், தந்தையின் பெயர், தாயின் பெயர், விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யும் விவரங்கள், தங்களின் அதிகாரப்பூர்வ அசல் சான்றிதழ்களில் உள்ளவாறு துல்லியமாகப் பொருந்துகிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
எவற்றை மாற்ற முடியாது
விண்ணப்பத்தில் உள்ள முக்கியத் தொடர்பு விவரங்களை எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி (Email ID), நிரந்தர மற்றும் தற்போதைய முகவரி, புகைப்படம், கையொப்பம் ஆகிய விவரங்களில் திருத்தங்கள் செய்ய அனுமதி கிடையாது.
திருத்தம் செய்வது எப்படி
விண்ணப்பதாரர்கள் 'என்டிஏ'வின் அதிகாரப்பூர்வ இணையதளமான nta.ac.in அல்லது யுஜிசி நெட் இணையதளத்திற்குச் சென்று, தங்களின் பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். அனுமதிக்கப்பட்ட விவரங்களை கவனமாக ஆய்வு செய்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மாற்றங்களைச் செய்து சமர்ப்பிக்கலாம்.
மேலும்
-
பிரபல ரவுடி குண்டாசில் கைது
-
போக்குவரத்து விதி மீறிய 25 ஆயிரம் பேருக்கு அபராதம்: சீனியர் எஸ்.பி., திவ்யா
-
அரசு கல்லுாரி டாக்டர் மீது மருத்துவ மாணவியர் புகார்
-
விழாவுக்கு மேயரை அழைக்காத கமிஷனர் அமைச்சர் முன் தி.மு.க., கவுன்சிலர் ‘லடாய்’
-
சிறு தொழிலுக்கு உதவ மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்க அரசு உத்தரவு
-
அரசு காப்பீட்டில் ‘டயாலிசிஸ்’ கட்டணம் கேட்டு அலைக்கழிப்பு