சம்பா நெல் சாகுபடியில் மேலுரம் தொழில் நுட்ப ஆலோசனை
காட்டுமன்னார்கோவில்: சம்பா நெல் சாகுபடியில் மேலுரம் இடுவது தொடர்பாக விவசாயிகளுக்கு வேளாண் துறை சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
குமராட்சி வட்டாரத்தில் 25,500 ஏக்கர் அளவில் நேரடி நெல் விதைப்பு மூலம் ஒரு போக சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கீழபருத்திக்குடி கிராமத்தில், சம்பா நடவு வயல்களை பார்வையிட்ட, குமராட்சி வேளாண் உதவி இயக்குனர் தமிழ்வேல், பயிர்கள் 30 முதல் 45 நாட்கள் கடந்த நிலையில் இரண்டாவது மேலுரம் இடும் தருவாயில் உள்ளது
ஏக்கருக்கு யூரியா 22 கிலோ. பொட்டாஷ் 18 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 5 கிலோ வீதம் மூன்றையும் ஒன்றாக கலந்து மூட்டையாக கட்டி இரண்டு நாட்கள் கழித்து மேலுரமாக இட வேண்டும். இதனால், பயிர் வளர்ச்சிக்கு தேவையான தழைச்சத்து, சாம்பல் சத்துக்கள் சீராக கிடைக்கும். மேலும், பயிர்கள் நன்கு வளர்ச்சி அடையும்.
வயல்களில் பயிர்களின் பச்சையத்தை அறிந்து, மூன்றாவது மேலுரம் 55 முதல் 60 நாட்களில் இதே அளவில் உரமிட வேண்டும். மாறாக அதிக அளவில் டி.ஏ.பி., மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை மேலுரமாக இடுவதால், கூடுதல் செலவுடன், பூச்சி நோய் தாக்குதல் ஏற்படுத்தும். எனவே, வேளாண் துறையில் பரிந்துரைக்கப்படும் உரங்களின் அளவில் மேலுரம் இடுவது அவசியம் என விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
அப்போது வேளாண் அலுவலர்கள் நடராஜன், ராமச்சந்திரன், சின்னசாமி மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.
மேலும்
-
கோபுரத்தை சுத்தம் செய்யும் பணிக்கு நந்தி வாகனத்தை பயன்படுத்தியதால் சர்ச்சை
-
மின் சேமிப்பு திறன் மேம்பாட்டுக்காக ரூ.14,500 கோடி நிதி ஒதுக்கீடு: ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை
-
புழுதியூரில் ரூ.2.70 கோடிக்கு கால்நடைகள் விற்பனை
-
விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டம்
-
238 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
-
புதிய பட்டுக்கூடு அங்காடி காணொலி மூலம் திறப்பு