கலெக்டர் அலுவலகத்தில் பூசாரிகள் பேரமைப்பு மனு

விழுப்புரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பூசாரிகள் பேரமைப்பு சார்பில் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

திண்டிவனம் அடுத்த ஏப்பாக்கத்தை சேர்ந்த பூசாரிகள் பேரமைப்பு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் கொடுத்துள்ள மனு;

ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் உள்ள பெரிய கோவில்களின் வருவாயிலிருந்து அந்த மாவட்டத்தில் பொருளாதாரத்தில் நலிவுற்று இருக்கும் ஹிந்து கோவிலுக்கு தீபம் ஏற்ற எண்ணை, நெய்வேத்ய பொருட்கள், வஸ்திரங்கள் உட்பட பூஜைப்பொருட்கள் வழங்க வேண்டும்.

பல கிரமங்களில் 12 ஆண்டுகளுக்கு மேல் கும்பாபிஷேகம் செய்யப்படாமல் சிதலமடைந்து கிடக்கும் கோவில்களை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். தமிழக அரசின் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பாக இயற்றப்பட்ட 60 வயது நிறைந்த பூஜாரிகளுக்கான ஓய்வூதியம் திட்டம் மற்றும் 60 வயதுக்கு உட்பட்ட பூஜாரிகள் நலவாரியத்திட்டம் சேர்வதற்கு ஆண்டு வருவாயை நிர்ணயத்தை ரத்து செய்யவேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement