பூசாரிகள் பேரமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பூசாரிகள் பேரமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பூசாரிகள் பேரமைப்பின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் பிரேம்குமார் தலைமையிலான நிர்வாகிகள் அளித்த மனு:
ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கோவில்களின் வருவாயில் இருந்து, பொருளாதாரத்தில் நலிவுற்ற நிலையில் இருக்கும் கோவில்களுக்கு நெய்வேத்ய பொருட்கள், வஸ்திரங்கள் வழங்க வேண்டும். 12 ஆண்டுகளுக்கு மேல் கும்பாபிஷேகம் செய்யாமல் உள்ள கோவில்களை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும்.
பூசாரிகள் நலவாரிய திட்டத்தில் சேருவதற்கு வருவாய் சான்று கோருவதை ரத்து செய்தல், ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பிக்கும் போது நலவாரியம் அட்டை கோருவதில் இருந்து விதிவிலக்கு அளித்தல், ஓய்வூதியத்தை 5,000 ரூபாயாக உயர்த்த வேண்டும்.
சரியாக செயல்படாமல் உள்ள அறநிலையத்துறை இணையதளத்தை சீரமைக்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஓய்வூதிய விண்ணப்பங்கள் மீது பரிசீலினை செய்து தகுதியுடைய பூசாரிகளுக்கு உடனடியாக ஓய்வூதியம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோவில்களுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டும். 200 யூனிட்டுக்கும் அதிகமாக பயன்படுத்தும் கோவில்களுக்கு வீட்டு உபயோக மின்சார கட்டண விகிதத்தில் கணக்கீடு செய்தல், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தரிசனத்திற்கு செல்லும் பூசாரிகளின் குடும்பத்தினருக்கு சிறப்பு தரிசனம் செய்ய அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட இணைச் செயலாளர் அம்மணி அம்மன், கோட்ட அமைப்பு செயலாளர் ரமேஷ், பொருளாளர் சிவராஜ், புரோகித் பூசாரிகள் மாவட்ட அமைப்பாளர் ராமச்சந்திரன் உட்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மேலும்
-
புயல் கரையை கடந்தது; ஆந்திராவில் நவம்பர் 5 வரை கனமழை தொடரும்: வானிலை மையம் எச்சரிக்கை
-
உக்ரைனில் ரஷ்யா குண்டுவீச்சு தாக்குதல்; 26 பேர் உயிரிழப்பு
-
அசாமில் மோசடி கும்பல் கைது; பாகிஸ்தான் உளவுத்துறை அமைப்புடன் தொடர்பா என விசாரணை
-
கலிபோர்னியா கடற்கரையில் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி
-
பஞ்சு விலை குறைந்தால் நுால் விலை குறையும்; இறக்குமதி வரி சலுகையை நீட்டிக்க வலியுறுத்தல்
-
இன்று பெருந்துறைக்கு பயணம்; ரூ.1,100 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதல்வர் விஜய்