மாநில இளையோர் விழாவில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசு
புதுச்சேரி: புதுச்சேரி அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறை சார்பில், மாநில அளவிலான இளையோர் விழா, கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்தது.
அமைச்சர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் கலைவாணி வரவேற்றார். முதல்வர் ரங்கசாமி அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். மாநில அளவில் நடைபெற்ற கவிதை, ஓவியம், குழுப் பாடல், குழு நடனம் மற்றும் தெருக்கூத்து நாடகம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்குப் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினார்.
விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறைச் செயலர் கிருஷ்ணமோகன் உப்பு, இயக்குநர் சுதாகர் வாழ்த்தி பேசினர். விக்சித் பாரத் இளம் தலைவர்களின் உரையாடல் மாநில திட்ட அதிகாரி சதீஷ்குமார் நோக்க உரையாற்றினார்.
விழாவில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை துணை இயக்குநர் வைத்தியநாதன், இந்திரா காந்தி மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் உதயசங்கர், முதல்வர் ராமச்சந்திர பட், மை பாரத் கேந்திரா மாநில பொறுப்பு இயக்குநர் டிராவின் சார்லஸ்டன் மற்றும் மாவட்ட இளைஞர் அலுவலர் ஸ்ரீசுக்கா ஷலேம் ராஜூ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற இளைஞர்கள், வரும் ஜனவரி மாதம் 10, 11, 12 ஆகிய தேதிகளில் புதுடெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளில் புதுச்சேரி மாநிலத்தின் சார்பில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றனர். ஏற்பாடுகளையும் மாநில திட்ட அதிகாரி சதீஷ்குமார் செய்திருந்தார். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் நன்றி கூறினார்.
மேலும்
-
மிரட்டியே பண வசூலித்தாரா அரசகுமார்? எனக்கு தெரியாது என்கிறார் மகேஷ்
-
ஆசியாவின் டாப் 100 பல்கலை பட்டியலில் ஐஐஎஸ்சி பெங்களூரு, 5 ஐஐடிக்கள்; முழு விவரம் இதோ!
-
போலி இணையதளங்களை நம்பி பொதுமக்கள் ஏமாறவேண்டாம்: உச்ச நீதிமன்ற பதிவகம் எச்சரிக்கை
-
அனல் மின் நிலையங்களில் 1,400 மெகா வாட் உற்பத்தி பாதிப்பு
-
விடுதிகளில் ரூ.15 லட்சம் மோசடி செய்த பெண் கைது
-
விபத்தில் பலியான முதியவரின் உடல் தோண்டி எடுப்பு