புதுச்சேரி பல்கலையில் சூரிய ஆற்றல் பயிலரங்கம்
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான செறிவூட்டப்பட்ட சூரிய வெப்ப ஆற்றல் குறித்த இருநாள் தொழில்நுட்பப் பயிலரங்கம் துவங்கியது.
பேராசிரியர் அருண் பிரசாத் வரவேற்றார். புதைபடிவ எரிபொருட்களை சார்ந்திருப்பதை குறைத்து, இந்தியாவின் 2070-ம் ஆண்டுக்கான நெட்-ஜீரோ இலக்கை அடைய செறிவூட்டப்பட்ட சூரிய வெப்ப ஆற்றல் தொழில்நுட்பங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
சூரிய ஆற்றல் தொழில்நுட்ப சல்யூஷன்ஸ் இந்தியாவின் இயக்குநர் திவிபென் போருவா, மதன்ஜீத் பசுமை ஆற்றல் தொழில்நுட்பப் பள்ளியின் முதல்வர் ஜாபர் அலி, பசுமை ஆற்றல் தொழில்நுட்பத் துறையின் தலைவர் பிரசாந்த், புதுச்சேரி பல்கலைக்கழக இயக்குநர் தரணிக்கரசு சிறப்புரையாற்றினர்.
செறிவூட்டப்பட்ட சூரிய ஆற்றல் தொழில்நுட்ப வடிவமைப்பு, பொருளாதார பயன்கள், பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் இயக்கம் குறித்து விளக்கப்பட்டது.
மேலும்
-
புயல் கரையை கடந்தது; ஆந்திராவில் நவம்பர் 5 வரை கனமழை தொடரும்: வானிலை மையம் எச்சரிக்கை
-
உக்ரைனில் ரஷ்யா குண்டுவீச்சு தாக்குதல்; 26 பேர் உயிரிழப்பு
-
அசாமில் மோசடி கும்பல் கைது; பாகிஸ்தான் உளவுத்துறை அமைப்புடன் தொடர்பா என விசாரணை
-
கலிபோர்னியா கடற்கரையில் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி
-
பஞ்சு விலை குறைந்தால் நுால் விலை குறையும்; இறக்குமதி வரி சலுகையை நீட்டிக்க வலியுறுத்தல்
-
இன்று பெருந்துறைக்கு பயணம்; ரூ.1,100 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதல்வர் விஜய்