ரேஷன் ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ்
விருதுநகர்: மாநிலம் முழுவதும் நடைபெற இருந்த ரேஷன் ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநிலத் தலைவர் ஜெயச்சந்திர ராஜா அறிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பொட்டலமாக வழங்குவது, பொது விநியோகத் திட்டத்திற்கென தனித்துறையை உருவாக்குவது, அனைத்து ரேஷன் கடைகளுக்கும் எடையாளரை நியமிப்பது, 9வது ஊதிய மாற்றக்குழுவில் ரேஷன் ஊழியர்களை சேர்ப்பது, வருங்கால வைப்பு நிதிக்கு வரவு வைப்பது, ரேஷன் கடைகளில் கழிப்பிட வசதி ஏற்படுத்துவது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நவ.2 முதல் நவ.4 வரை ஸ்டிரைக் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அக்.29ல் பதிவாளர் லதா உடன் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 12 கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தனி துறைக்கான காரணத்தை தெளிவுப்படுத்தக் கோரி கேட்டுள்ளார். மேலும் புதிதாக எடையாளர் நியமிப்பது, வருங்கால வைப்பு நிதி வரவு வைக்கப்படுவதை கண்காணிப்பது, கடைகளில் கழிப்பிட வசதி ஏற்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மற்ற கோரிக்கைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து ஸ்டிரைக் வாபஸ் பெறப்படுகிறது, என்றார்.
மேலும்
-
வீழ்த்த நினைப்பவர்களின் எண்ணம் நடக்காது யூடியூபர் மதுமிதா மீண்டும் வீடியோ
-
எஸ்.ஐ.,க்களை இடமாற்றம் செய்யக்கோரி வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம்
-
ஆந்திராவுக்கு உதவ 500 பணியாளர் அனுப்பியது தமிழக மின்வாரியம்
-
ரீல்ஸ் மோகத்தால் அருவிகளில் சிக்கல்
-
சோழவந்தான் தமிழாசிரியை சாதனை
-
கல்லுாரிகள் இடையிலான ஹாக்கிசெய்யது அம்மாள் கல்லுாரி வெற்றி