கல்லுாரிகள் இடையிலான ஹாக்கிசெய்யது அம்மாள் கல்லுாரி வெற்றி
ராமநாதபுரம்: அழகப்பா பல்கலை கல்லுாரிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டி ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியின் அணி முதலிடம் பெற்றுள்ளது.
செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி ஒருங்கிணைந்து நடத்திய அழகப்பா பல்கலை கல்லுாரிகளுக்கு இடையிலான ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கிப் போட்டி நடந்தது. தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, முதல்வர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தனர். ஆண்கள் ஹாக்கி போட்டியில் செய்யது அம்மாள் கலை, அறிவியல் கல்லுாரி முதலிடம் பிடித்தது.
இரண்டாம் இடம் அழகப்பா பல்கலை உடற்கல்வி கல்லுாரியும், 3ம் இடத்தை அழகப்பா கலை –அறிவியல் கல்லுாரியும், 4ம் இடத்தை சேதுபதி அரசு கலைக் கல்லுாரியும் பெற்றனர். பெண்கள் பிரிவில் முதலிடத்தை அழகப்பா பல்கலை உடற்கல்வி கல்லுாரியும், 2ம் இடத்தை அழகப்பா கலை –அறிவியல் கல்லுாரியும், 3ம் இடத்தை சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லுாரியும், 4ம் இடத்தை கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லுாரியும் அடைந்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் இளைஞர் நல அலுவலர் தினேஷ்குமார், அழகப்பா உடற்கல்வி கல்லுாரி முதல்வர் முரளி ராஜன், உடற்கல்வி இயக்குநர்கள் ஜெயவேல் காளிதாஸ், ஹாக்கி விளையாட்டுப் பயிற்றுநர் மணிகண்டன் பங்கேற்றனர். செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா மாணவர்களை வாழ்த்தினார்.
போட்டி ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, மேற்பார்வையாளர் சபியுல்லா செய்தனர்.
மேலும்
-
பிரபல ரவுடி குண்டாசில் கைது
-
போக்குவரத்து விதி மீறிய 25 ஆயிரம் பேருக்கு அபராதம்: சீனியர் எஸ்.பி., திவ்யா
-
அரசு கல்லுாரி டாக்டர் மீது மருத்துவ மாணவியர் புகார்
-
விழாவுக்கு மேயரை அழைக்காத கமிஷனர் அமைச்சர் முன் தி.மு.க., கவுன்சிலர் ‘லடாய்’
-
சிறு தொழிலுக்கு உதவ மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்க அரசு உத்தரவு
-
அரசு காப்பீட்டில் ‘டயாலிசிஸ்’ கட்டணம் கேட்டு அலைக்கழிப்பு