ரீல்ஸ் மோகத்தால் அருவிகளில் சிக்கல்
ராஜபாளையம்: ராஜபாளையம் சுற்று பகுதி நீர்வீழ்ச்சி பகுதிகளில் ரீல்ஸ் மோகத்தால் வீடியோ எடுத்து பதிவிடுவது சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.
ராஜபாளையம் ஓட்டி மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் அய்யனார் கோயில் ஆறு, ராக்காச்சி அம்மன் பாலருவி, சாஸ்தா கோயில் அருவி உள்ளிட்ட நீர் நிலைகள் உள்ளன.
சமீப காலமாக இளைஞர்கள் சமூக வலைதளத்தில் வலைத்தளத்தில் கிடைக்கும் புகழுக்கு மயங்கி உயிரை பணயம் வைத்து விபரீத செயல்களில் வீடியோ வெளியிடுகின்றனர்.
நீர்வீழ்ச்சி பகுதிகளிலும் மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படும் நிலையிலும் வனத்துறையினரால் தடை ஏற்படுத்தப்பட்ட நிலையில் விதிகளை மீறி சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று வீடியோ வெளியிட்டு புகழை எதிர்பார்க்கின்றனர். அதிகாரப்பூர்வமான வனத்துறையின் அறிவிப்புகளை மீறி தவறான தகவல்களை வெளியிடுவதை கண்டு மக்கள் படையெடுப்பதுடன், வனத்துறையினரின் அறிவிப்பு பலனின்றி போகிறது.
எனவே ரீல்ஸ் மோகத்தால் வெளியிடப்படும் வீடியோக்களின் உண்மை தன்மைகளை விசாரித்து நீர் நிலைகளுக்கு விரைவதை மேற்கொள்ள வேண்டும் என வனத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
பிரபல ரவுடி குண்டாசில் கைது
-
போக்குவரத்து விதி மீறிய 25 ஆயிரம் பேருக்கு அபராதம்: சீனியர் எஸ்.பி., திவ்யா
-
அரசு கல்லுாரி டாக்டர் மீது மருத்துவ மாணவியர் புகார்
-
விழாவுக்கு மேயரை அழைக்காத கமிஷனர் அமைச்சர் முன் தி.மு.க., கவுன்சிலர் ‘லடாய்’
-
சிறு தொழிலுக்கு உதவ மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்க அரசு உத்தரவு
-
அரசு காப்பீட்டில் ‘டயாலிசிஸ்’ கட்டணம் கேட்டு அலைக்கழிப்பு