ஆன்லைனில் மளிகை பொருட்கள் மோசடி

தேனி: தீபாவளி பண்டிகை நவ. 8 ல் கொண்டாடப்படுகிறது. பண்டிகையை முன்னிட்டு பட்டாசு, ஆடைகள், மளிகை பொருட்கள் வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆன்லைனில் மளிகை பொருட்களை சலுகை விலையில் வாங்கலாம் என்ற மோசடி மாவட்டத்தில் நடப்பதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கின்றனர். எஸ்.ஐ., தாமரை கண்ணன் கூறுகையில், ‘பிரபல ஆன்லைன் நிறுவனங்கள் பெயரில் இணைய தளங்கள் உள்ளன. அவற்றில் உள்ள மளிகை பொருட்களை 50 சதவீதம் வரை சலுகையில் வாங்கலாம் என விளம்பரம் செய்யப்படுகிறது. அவற்றை நம்பி, இணையதளத்தில் வங்கி கணக்கு விபரங்களை பதிவிடுபவர்களிடம் பணம் பறிக்க வாய்ப்பு உள்ளது. எனவே ஆன்லைனில் ஆர்டர் செய்யும்போது வங்கி கணக்கு விபரங்களை உள்ளீடு செய்யாதீர்கள். ஆன்லைனில் பணத்தை இழந்தால் உடனடியாக 1930 எண்ணை அழையுங்கள்,’ என்றார்.

Advertisement