பணிகள் முடிந்தும் திறக்காத இணைப்புச்சாலை நெரிசலைகுறைக்க பண்டிகை காலத்திலாவது திறங்க –
ராஜபாளையம்: ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை ரோட்டிற்கு இணைப்பு சாலை பணிகள் முடிந்தும் செயல்பாட்டுக்கு வராத நிலையில் பண்டிகை காலத்திலாவது பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ராஜபாளையம் நகர் பகுதி நெரிசலை கட்டுப்படுத்த வேண்டி புது பஸ் ஸ்டாண்டு அருகே சங்கரன்கோவில்- திருநெல்வேலி, திருமங்கலம்- கொல்லம் நெடுஞ்சாலைக்கு இணைப்பு ரோடு 2.10 கி.மீ., துாரத்தில் ரூ.38.34 கோடி செலவில் கடந்த ஆட்சி முடிவடையும் நிலையில் திறக்கப்பட்டது.
இதன் மூலம் தென்காசி, மதுரையில் இருந்து வரும் வாகனங்களால் நகரின் போக்குவரத்து இடையூறு குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் 6 மாதங்கள் கடந்தும் இணைப்பு சாலை செயல்பாட்டிற்கு வராமல் வழக்கம்போல புது பஸ் ஸ்டாண்டில் இருந்து தென்காசி செல்லும் பஸ், செங்கோட்டை மார்க்கமாக வரும் பஸ்கள் காந்தி சிலை ரவுண்டானா வழியே சுற்றி மீண்டும் அதே பகுதியை அடைவதால் இணைப்பு ரோடு அமைத்ததன் நோக்கம் வீணாகிறது.
தீபாவளி பண்டிகை உள்ளிட்ட நெரிசல் காலத்திலாவது இந்த பாதையை செயல்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
பிரபல ரவுடி குண்டாசில் கைது
-
போக்குவரத்து விதி மீறிய 25 ஆயிரம் பேருக்கு அபராதம்: சீனியர் எஸ்.பி., திவ்யா
-
அரசு கல்லுாரி டாக்டர் மீது மருத்துவ மாணவியர் புகார்
-
விழாவுக்கு மேயரை அழைக்காத கமிஷனர் அமைச்சர் முன் தி.மு.க., கவுன்சிலர் ‘லடாய்’
-
சிறு தொழிலுக்கு உதவ மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்க அரசு உத்தரவு
-
அரசு காப்பீட்டில் ‘டயாலிசிஸ்’ கட்டணம் கேட்டு அலைக்கழிப்பு