தினமலர் செய்தி எதிரொலி அச்சங்குளத்தில் மருத்துவகுழுவினர் முகாம்

காரியாபட்டி: காரியாபட்டி அச்சங்குளத்தில் 20க்கும் மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தது குறித்து வெளியான செய்தி எதிரொலியால் மருத்துவ குழுவினர் முகாமிட்டு சுகாதாரப் பணிகளை மேற்கொண்டனர்.

காரியாபட்டி பகுதியில் சமீபத்தில் பருவ மழை காரணமாக நிலங்களில் தேங்கிய நீரில் கொசு உற்பத்தியாகி காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக காரியாபட்டி அச்சங்குளத்தில் வீரம்மாள், அக்சய கிருஷ்ணா, செல்வகுமார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டு, பலர் அரசு ,தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து நேற்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து மண்டல பூச்சியியல் வல்லுநர் வரதராஜன் தலைமையில், மாவட்ட பூச்சியியல் வல்லுநர் ஜெயசுப சூர்யா, மாவட்ட இளநிலை பூச்சியியல் வல்லுநர் பழனிவேல், சுகாதார மேற்பார்வையாளர் சின்னச்சாமி, டாக்டர் கேசவி, சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ், ரமேஷ் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு கொசுப் புழு ஒழிப்பு பணி, குளோரினேசன் பணி, கூட்டு சுத்தப்பணி, நிலவேம்பு கசாயம் கொடுத்து, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை கணக்கெடுத்து மருத்துவ முகாம் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

Advertisement