விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்தில் லிப்ட் பொறுத்தும் பணி கிடப்பில்
விருத்தாசலம்: ரூ. 5.75 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ஒன்றிய அலுவலகத்தில், நிதி பற்றாக்குறையால் லிப்ட் பொறுத்தும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
விருத்தாசலத்தில், பிரதான கடலுார் சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்படுகிறது. இங்கு 51 ஊராட்சிகளின் தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், 19 ஒன்றிய கவுன்சிலர்கள் அன்றாட பணிகளுக்கு வந்து செல்கின்றனர்.
பி.டி.ஓ.,க்கள், துணை பி.டி.ஓ.,க்கள், பொறியாளர்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணிபுரிகின்றனர். கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், அரசின் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இடநெருக்கடி மற்றும் பழுதான கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு ரூ.5.75 கோடியில் தரைத்தளம், முதல் தளம் என புதிய கட்டடம் கட்டப்பட்டு, கடந்த தி.மு.க., ஆட்சியில் திறக்கப்பட்டது. இத்துடன் லிப்ட் பொறுத்தும் வகையில் பணிகள் நடந்தது.
ஆனால், நிதி பற்றாக்குறை காரணமாக அந்தப் பகுதி, தற்காலிகமாக மூடப்பட்டு, நோட்டீஸ் ஒட்டும் பலகையாக பயன்படுத்தப்படுகிறது. புதிய கட்டடம் திறக்கப்பட்டு ஏழு மாதங்களுக்கு மேலாகியும், இதே நிலை தொடர்கிறது.
எனவே, புதிய ஒன்றிய அலுவலகத்தில் லிப்ட் பொறுத்தவும், கட்டடத்தை சுற்றியும் நடைபாதை, மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதற்கு மன்னிப்பு கோரினார் பாலிவுட் நடிகர் இம்ரான் கான்
-
இரும்பு பைப் திருட்டு
-
அடுத்தடுத்து தர்ணா போராட்டம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
-
கைதி தற்கொலை முயற்சி போலீசார் விசாரணை
-
புதிய குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் வசதி மோகன்தாஸ் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு
-
சாலை சீரமைப்பு பணி ஆணையர் ஆய்வு