பள்ளி மாணவர்களுக்கு புத்தாடை வழங்கல்

சிதம்பரம்: சிதம்பரம், கொத்தங்குடி தெரு மற்றும் அம்மாபேட்டை அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.

அண்ணாமலை பல்கலை., பேராசிரியர் ஞானகுமார் ஏற்பாட்டில், ரயில் நிலைய கேன்டீன் ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள், நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் வல்லம்படுகை ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் 65 பேருக்கு தலா ரூ.810 மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் வழங்கினார். மேலும், அரசு பள்ளி மாணவர்கள் 45 பேருக்கு பட்டாசு, இனிப்புகள் மற்றும் புத்தாடைகள் வழங்கினார்.

பேராசிரியர்கள் லதா, ஏழிசைவல்லபி, ரயில் நிலைய மேலாளர் சந்திரமோகன் சிங், நகராட்சி துணைத் தலைவர் முத்து உட்பட பலர் பங்கேற்றனர்.

கார்த்திக் ராஜா நன்றி கூறினார்.

Advertisement