விவசாயியை வெட்டிய வாலிபர் கைது
ஸ்ரீமுஷ்ணம்: 1
முன்விரோதத்தில் விவசாயியை வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீமுஷ்ணம் அடுத்த இணமங்கலத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி,39; அதே ஊரைச் சேர்ந்தவர் சதீஷ்,21; இரு குடும்பத்திற்கு இடையே, கிராமத்தில்உள்ள மாரியம்மன் கோவில் நாட்டார் யார் என்பதில் முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில் கடந்த 31ம் தேதி இரவு, தனது சகோதரர் வீட்டின் முன் நின்றிருந்த ராமமூர்த்தியிடம், அவ்வழியே சென்ற சதீஷ் வீண் தகராறு செய்தார். அப்போது சதீஷ், தான் வைத்திருந்த கத்தியால், வெட்டினார். அதில் ராமமூர்த்தியின் இடது கை நடு விரலில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. உடன் அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்கு பதிந்து சதீஷை, கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதற்கு மன்னிப்பு கோரினார் பாலிவுட் நடிகர் இம்ரான் கான்
-
இரும்பு பைப் திருட்டு
-
அடுத்தடுத்து தர்ணா போராட்டம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
-
கைதி தற்கொலை முயற்சி போலீசார் விசாரணை
-
புதிய குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் வசதி மோகன்தாஸ் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு
-
சாலை சீரமைப்பு பணி ஆணையர் ஆய்வு
Advertisement
Advertisement