ஆவின் பால் விலை உயர்வு இல்லை
சென்னை: ‘பால் விலையை உயர்த்தப் போவதில்லை’ என, ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆவின் பால் விலையை உயர்த்த, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக, நமது நாளிதழில் இன்று (நவ.,2) செய்தி வெளியானது.
இது தொடர்பாக, ஆவின் நிறுவனம் அளித்துள்ள விளக்கம்:
ஆவின் பால் விலையை லிட்டருக்கு ஐந்து ரூபாய் உயர்த்த, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனம், பொது மக்களின் நலனை கருத்தில் வைத்து, தரமான பால் மற்றும் பால் பொருட்களை நியாயமான விலையில் தொடர்ந்து வழங்கி வருகிறது.
பால் உற்பத்தியாளர்களின் நலன், பால் கொள்முதல் விலை மற்றும் நுகர்வோரின் நலன் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ஆவின் செயல்பட்டு வருகிறது. பால் விலை உயர்வு தொடர்பாக வெளியான செய்தி தவறானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement