பாலம் அமைக்கும் பணி ரத்து அரசை கண்டித்து போராட்டம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கல்லணையிலிருந்து பிரிந்து வரும் வெண்ணாறு, தென்பெரம்பூர் கிராமத்தில் வெட்டாறு, வடவாறு, ஜம்புகாவேரி வாய்க்காலாக பிரிகிறது. இங்குள்ள ‘ஷட்டர்’களை இயக்க, நான்கு அடி அகலம் கொண்ட சிறிய பாலம் உள்ளது. இது, நடந்து செல்ல பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தென்பெரம்பூர் பகுதியில் உள்ள நடுக்காவேரி, குழிமாத்துார், வெள்ளாம்பெரம்பூர், ஐம்பதுமேல் நகரம், அள்ளூர், அல்சகுடி உட்பட, 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள், நான்கு அடி அகலம் கொண்ட பாதையை, காலம் காலமாக பயன்படுத்தி வருகின்றனர்.
பெரிய வாகனங்கள் செல்ல ஒவ்வொரு முறையும், 15 முதல் 25 கி.மீ., துாரம் வரை சுற்றி பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த தி.மு.க., ஆட்சியில், 2025 ஜூன் 16ல், முன்னாள் முதல்வர் ஸ்டாலின், ‘தென்பெரம்பூரில், 42 கோடி ரூபாயில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும்’ என அறிவித்தார். அதன்பின், ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் உயர்மட்ட பாலம் அமைக்கும் திட்டத்தை, த.வெ.க., அரசு ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இதையறிந்த, 40 கிராமங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், உயர்மட்ட பாலத்தை உடனே கட்ட நிதி ஒதுக்கக்கோரி, துாளி கட்டி, அதில் ஒருவரை துாக்கி சென்று, நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்
-
பிரபல ரவுடி குண்டாசில் கைது
-
போக்குவரத்து விதி மீறிய 25 ஆயிரம் பேருக்கு அபராதம்: சீனியர் எஸ்.பி., திவ்யா
-
அரசு கல்லுாரி டாக்டர் மீது மருத்துவ மாணவியர் புகார்
-
விழாவுக்கு மேயரை அழைக்காத கமிஷனர் அமைச்சர் முன் தி.மு.க., கவுன்சிலர் ‘லடாய்’
-
சிறு தொழிலுக்கு உதவ மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்க அரசு உத்தரவு
-
அரசு காப்பீட்டில் ‘டயாலிசிஸ்’ கட்டணம் கேட்டு அலைக்கழிப்பு