நிரம்பி வழிகிறது தொட்டி: 10 நாளாக வீணாகும் குடிநீர்
கோவை: கிழக்கு மண்டலம், 22வது வார்டு ஸ்ரீவிக்னேஷ் நகரில் பூங்கா வளாகத்துக்குள் 30 லட்சம் லிட்டர் கொள்ளளவு குடிநீர் தொட்டி உள்ளது. நிரம்பி வழியும் தண்ணீர், பூங்காவுக்குள் தேங்கி நிற்கிறது. 10 நாட்களாக வீணாகி வருவதாக, அப்பகுதியினர் தெரிவித்தனர்.
மாநகராட்சிக்கு பாலசுப்ரமணியன் என்பவர் தகவல் தெரிவித்ததற்கு, அந்த 'தொட்டி குடிநீர் வடிகால் வாரியத்துக்கு சொந்தமானது; மாநகராட்சி வசம் ஒப்படைக்கவில்லை' என, பதில் அளிக்கப்பட்டிருக்கிறது.
வாரியத்தினரிடம் தெரிவித்தபோது, 'மாநகராட்சி வசம் ஒப்படைத்து விட்டோம். குடிநீர் வினியோகம் மாநகராட்சியே செய்கிறது' என கூறியிருக்கின்றனர்.
பாலசுப்ரமணியன் நம்மிடம் கூறும்போது, 'ஸ்ரீவிக்னேஷ் நகரில் உள்ள வீடுகளுக்கு 3 அல்லது 7 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வழங்கப்படுகிறது. 10 நாட்களாக தொட்டி நிரம்பி வழிகிறது. ஒருபுறம் குடிநீர் பற்றாக்குறை; இன்னொருபுறம் வீணாக்கப்படுகிறது. பூங்காவில் தேங்கியுள்ள தண்ணீரில் மண் இலகுதன்மையாகும். அருகில் உள்ள குடியிருப்புகளின் அஸ்திவாரம் பாதிக்கப்படுமோ என்கிற அச்சம் ஏற்படுகிறது. மாநகராட்சி குடிநீர் பிரிவினர் ஆய்வு செய்து, தொட்டி நிரம்பி வழிவதை தடுக்க வேண்டும்' என்றார்.
மேலும்
-
பிரபல ரவுடி குண்டாசில் கைது
-
போக்குவரத்து விதி மீறிய 25 ஆயிரம் பேருக்கு அபராதம்: சீனியர் எஸ்.பி., திவ்யா
-
அரசு கல்லுாரி டாக்டர் மீது மருத்துவ மாணவியர் புகார்
-
விழாவுக்கு மேயரை அழைக்காத கமிஷனர் அமைச்சர் முன் தி.மு.க., கவுன்சிலர் ‘லடாய்’
-
சிறு தொழிலுக்கு உதவ மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்க அரசு உத்தரவு
-
அரசு காப்பீட்டில் ‘டயாலிசிஸ்’ கட்டணம் கேட்டு அலைக்கழிப்பு