கோவில் நிலங்களை குத்தகைக்கு விட கோரிக்கை
பல்லடம்: பல்லடம் ஒன்றியம், பணிக்கம்பட்டி ஊராட்சி பொதுமக்கள் சார்பில், அறநிலையத்துறையிடம் அளிக்கப்பட்டுள்ள கோரிக்கை மனு:
பணிக்கம்பட்டி ஊராட்சி ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் பல ஆண்டுகளாக பயன்பாடற்று கிடைக்கின்றன. இவற்றை, விவசாயம் உள்ளிட்ட பயன்பாட்டுக்கு விடும் பட்சத்தில், உணவு உற்பத்தி பெருகுவதுடன், எண்ணற்ற விவசாயிகளும் பயனடைவர். அரசுக்கும் இதன் வாயிலாக கூடுதல் வருவாய் கிடைக்கும்.
நிலங்களை குத்தகைக்கு எடுக்க இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பலரும் தயாராக உள்ளனர். எனவே, பயனின்றி கிடக்கும் கோவில் நிலங்களை, பொது ஏலம் நடத்தி, விவசாயம் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட பயன்பாட்டுக்காக, குத்தகைக்கு விட அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement