வினாடி வினா போட்டி
மதுரை: மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி நோயியல் துறை முன்னாள் தலைவர் திலகவதி நினைவு தேசிய ரத்தவியல் வினாடி வினா போட்டி நடந்தது.
தேசிய அளவில் 106 மருத்துவ மாணவர்களின் அணிகள் பதிவு செய்தன. இணையவழி வினாடி வினாவில் 70 அணிகள் பங்கேற்றன. மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லுாரி மூன்றாமாண்டு மாணவர்கள் பிரியா சோனி, யாஷஸ்வி தன்வர் முதலிடம் பெற்றனர்.
சென்னை அரசு மருத்துவக் கல்லுாரி இரண்டாமிடம், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மூன்றாமிடம் பெற்றன. மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி டீன் அருள் சுந்தரேஷ் குமார் பரிசு வழங்கினார். அதிக நிகழ்வுகளில் பங்கேற்ற திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரிக்கு ஒட்டுமொத்த பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. டாக்டர்கள் ராஜேந்திரன், ராஜேஸ்வரி பங்கேற்றனர்.
நோயெதிர்ப்பு ரத்தவியல் மற்றும் ரத்தமாற்று துறைத்தலைவர் சிந்தா ஏற்பாடுகளை செய்திருந்தார். ரத்தத்தான கழகம், ஆஸ்ட்ரல் கல்விக்கழகம், வினாடி வினா கழகம் மற்றும் ஆய்வுக்கழகம் போட்டிகளை நடத்தின.
மேலும்
-
மிரட்டியே பண வசூலித்தாரா அரசகுமார்? எனக்கு தெரியாது என்கிறார் மகேஷ்
-
ஆசியாவின் டாப் 100 பல்கலை பட்டியலில் ஐஐஎஸ்சி பெங்களூரு, 5 ஐஐடிக்கள்; முழு விவரம் இதோ!
-
போலி இணையதளங்களை நம்பி பொதுமக்கள் ஏமாறவேண்டாம்: உச்ச நீதிமன்ற பதிவகம் எச்சரிக்கை
-
அனல் மின் நிலையங்களில் 1,400 மெகா வாட் உற்பத்தி பாதிப்பு
-
விடுதிகளில் ரூ.15 லட்சம் மோசடி செய்த பெண் கைது
-
விபத்தில் பலியான முதியவரின் உடல் தோண்டி எடுப்பு