ஹரித்ரா ஹரி சகஸ்ரநாம அறக்கட்டளை ஆண்டு விழா

கடலுார்: கடலுாரில் ஹரித்ரா ஹரி சகஸ்ரநாம அறக்கட்டளையின் 13ம் ஆண்டு விழாவில், ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஹரித்ரா ஹரி சகஸ்ரநாம அறக்கட்டளையின் 13ம் ஆண்டு விழா கடலுார் சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் இன்று (நவ.,2) நடந்தது. இதனையொட்டி மதியம் விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாம கூட்டு பாராயணம் நடந்தது. மாலை குத்துவிளக்கேற்றி விழா துவங்கியது. தொடர்ந்து, நடந்த உபன்யாசம் நிகழ்வில் அறக்கட்டளை நிர்வாக அலுவலர் முத்துவரதன் வரவேற்றார். விட்டல்தாஸ் மஹராஜ் உபன்யாசம் நிகழ்த்தினார். ஏராளமான ஆன்மிக அனபர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

அறக்கட்டளை நிர்வாக குழு உறுப்பினர் அப்பாஜி நன்றி கூறினார்.

Advertisement