கல்லறை திருநாள் அனுசரிப்பு

கடலுார்: கல்லறை திருநாளையொட்டி கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களின் கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு நடத்தினர்.

கிறிஸ்தவர்கள், இறந்த தங்கள் முன்னோர்களை நினைவு கூறும் பொருட்டு, நவ., 2ம் தேதி, கல்லறை திருநாளாக அனுசரித்து வருகின்றனர்.

அதன்படி இந்தாண்டு கல்லறை திருநாள் இன்று (நவ.,2) அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, கிறிஸ்துவர்கள், தங்கள் முன்னோர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரித்தும், மாலை அணிவித்தும், மெழுகு வர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர். பின்னர், கூட்டு திருப்பலியில் பங்கேற்றனர்.

Advertisement