விபத்தில் பலியான முதியவரின் உடல் தோண்டி எடுப்பு
அண்ணா நகர்: சாலை விபத்தில் காயமடைந்து, மருத்துவமனையில் உயிரிழந்த முதியவரின் உடலை, போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உறவினர்கள் மசூதியில் அடக்கம் செய்தனர். இதையடுத்து, எட்டு நாட்களுக்குப் பின், தாசில்தார் முன்னிலையில் போலீசார் உடலை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
அமைந்தகரையைச் சேர்ந்தவர் ரஷித், 68. மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த மாதம் 16ம் தேதி, அமைந்தகரை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, விபத்தில் சிக்கி காயமடைந்தார்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 26ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல், உறவினர்கள் அதே நாளில் அமைந்தகரை மசூதியில் உடலை அடக்கம் செய்தனர்.
இதையறிந்த போலீசார், சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது திருமங்கலம் போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, தாசில்தார் இளங்கோவன் முன்னிலையில், நேற்று காலை உடலை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும்
-
மின் சேமிப்பு திறன் மேம்பாட்டுக்காக ரூ.14,500 கோடி நிதி ஒதுக்கீடு: ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை
-
புழுதியூரில் ரூ.2.70 கோடிக்கு கால்நடைகள் விற்பனை
-
விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டம்
-
238 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
-
புதிய பட்டுக்கூடு அங்காடி காணொலி மூலம் திறப்பு
-
சம்பளம் கேட்டு பஞ்., ஆபீஸ் முன் துாய்மை பணியாளர் தர்ணா