விடுதிகளில் ரூ.15 லட்சம் மோசடி செய்த பெண் கைது
ஆலந்துார்: விடுதிகளில், 15 லட்சம் ரூபாய் மோசடி செய்த 28 வயது பெண் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்துார், புதுப்பேட்டை தெருவைச் சேர்ந்த முருகதாஸின் மனைவி கீதா, 42. இவர், ஆலந்துாரில் ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியாக விடுதிகள் நடத்தி வருகிறார்.
கடந்தாண்டு ஜூன் மாதம், குடும்பச் சூழல் காரணமாக விடுதிகளை நிர்வகிக்க கிண்டி, மடுவின்கரையைச் சேர்ந்த சுபதாரணி, 28,என்பவரை பணியமர்த்தி பொறுப்புகளை ஒப்படைத்தார்.
விடுதிகள் நஷ்டத்தில் இயங்குவதாகவும், மேம்பாட்டுக்கு பணம் தேவைப்படுவதாகவும் சுபதாரணி கூறியுள்ளார். இதையடுத்து, நகைகளை அடகு வைத்தும், கடன் வாங்கியும், கீதா 21 லட்சம் ரூபாய் செலவு செய்து விடுதிகளை மேம்படுத்தினார்.
இதற்கிடையே, கணக்கு வழக்குகளை சரிபார்த்தபோது, விடுதி வாடகைப் பணத்தை சுபதாரணி தன் வங்கி கணக்கில் பெற்று, 15 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது. பின், பணத்தை திருப்பித் தருவதாகக் கூறிய அவர், பல்வேறு காரணங்களைக் கூறி காலம் தாழ்த்தியுள்ளார்.
இது குறித்து கீதா அளித்த புகாரின்படி, பரங்கிமலை போலீசார் விசாரித்து, சுபதாரணியை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.