அனல் மின் நிலையங்களில் 1,400 மெகா வாட் உற்பத்தி பாதிப்பு

சென்னை: அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலையங்களில், 1,400 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் மின் வாரியத்துக்கு சொந்தமான வடசென்னை விரிவாக்க அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு, தலா 600 மெகாவாட் திறன் கொண்ட இரு அலகுகள் செயல்பட்டு வருகின்றன. அருகில் உள்ள வடசென்னை – 3 அனல் மின் நிலையத்தில் 800 மெகாவாட் திறன் கொண்ட ஓர் அலகு உள்ளது.

வடசென்னை விரிவாக்க மின் நிலையத்தின் இரண்டாவது அலகில், ‘பாய்லர் டியூப் பஞ்சர்’ காரணமாக, நேற்று முன்தினம் மதியம் முதல் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வடசென்னை – 3 மின் நிலையத்தின் 800 மெகாவாட் அலகிலும், நேற்று முன்தினம் மாலை முதல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வடசென்னை – 3 மின் நிலையத்துக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம் அரியலுாருக்கும் இடையிலான 765 கிலோவோல்ட் மின் வழித்தடத்தில் ஏற்பட்ட பழுது இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

Advertisement