மருத்துவ கட்டமைப்பில் தாய்லாந்தை பின்பற்ற முடிவு; அமைச்சர் அருண்ராஜ்
சென்னை: தாய்லாந்தை பின்பற்றி, தமிழக மருத்துவ கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில், தேசிய சுகாதார பேரவை கூட்டம் சமீபத்தில் நடந்தது. தமிழக மக்கள் நல்வாழ்வுதுறை அமைச் சர் அருண்ராஜ், செயலாளர் தாரேஸ் அகமது, தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் எஸ்.அனீஷ் சேகர் ஆகியோர் அடங்கிய குழு பங்கேற்றது.
இது குறித்து, அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:
தாய்லாந்துக்கும், தமி ழகத்திற்கும் பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன. அதனால், அந்தாட்டின் மருத்துவ அனுபவங்கள் தமிழகத்திற்கு பயன்படும். அங்கு, சுகாதார தொழில்நுட்ப மதிப்பீட்டு நிறுவனம் செயல்படுகிறது.
அந்நிறுவனம் ஒரு புதிய மருந்தையோ, சிகிச்சையையோ. அரசின் இலவச மருத்துவ திட்டத்தில் சேர்ப்பதற்கு முன், அதன் பயன், செலவு ஆகியவற்றை ஆய்வு செய்து, அரசுக்கு பரிந்துரை செய்கிறது.
அத்துடன், மருத்துவமனைகளுக்கு பணம் வழங்கும் முறை சரியாக இல்லாவிட்டால், தேவையற்ற சிகிச்சை அதிகரிக்கும் என்பதை இந்நிறுவனம் விளக்குகிறது. மருத்துவ பணியாளர்கள், கிராம சுகாதார தன்னார்வலர்கள், நோயாளிகளின் குடும்பத்தினர் ஆகியோர் இணைந்து, ஓரே குழுவாக செயல்படுகின்றனர்.
மக்களின் வீடுகளுக்கு சென்றே, நோயாளிகளை தொடர்ந்து கவனித்து கொள்கின்றனர். அதேபோல, தேசிய சுகாதார பாதுகாப்பு அலுவலகம் செயல்படுகிறது. இந்த அமைப்பு எந்த மருத்துவமனையையும் நேரிடையாக நடத்துவது இல்லை. மாறாக, ஆரம்ப சுகாதார மையத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, மக்களின் மருத்துவ சேவைக்கு நிதி வழங்குகிறது.
தாய்லாந்து தன் மருத்துவமனை சேவைகளை ஏழை. பணக்காரர் என்ற வேறுபாடின்றி அனைவருக்குமானதாக உருவாக்கி உள்ளது. அதேபோல், ஏழை, பணக்காரர் என்ற பேதமின்றி, அனைவரும் சிகிச்சை பெறும் வகையில், மருத்துவ சேவைகளை உருவாக் குவது, தமிழக அரசின் நோக்கம்.
இந்த பயணத்தின் கற்றறிந்தவை குறித்து, முதல்வருக்கு விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதே போல், தாய்லாந்தின் சுகாதார அமைப்புகளுடன் இணைந்து செயல்பட வழிவகை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மஸ்ஸாஜ் சென்டெர்ஸ் ஆரம்பிக்க போறீங்களா ஆபீசர் ?மேலும்
-
முற்றுகைப் போராட்டம்
-
தேனியில் குவியும் பொதுமக்கள் களைகட்டிய தீபாவளி விற்பனை
-
காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் 1,008 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
-
170 ஆண்டு நீராவி ரயில் இன்ஜின் எழும்பூர் – ராயபுரம் வரை இயக்கம்: ரயில்வே பாரம்பரிய விழா
-
சைவம், வைணவம் பற்றி பேசிய தி.மு.க., ‘மாஜி’ மீதான வழக்கை வாபஸ் பெற்றார் பா.ஜ., கவுன்சிலர்
-
மகாதேவ் சூதாட்ட செயலி; மற்றொரு முக்கிய குற்றவாளி ரவி உப்பால் துபாயில் கைது