பிரிமீயர் லீக் கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு செல்கிறார் ஹர்திக் பாண்டியா

பிரிமியர் லீக் தொடரில் மும்பை அணியில் விளையாடும் ஹர்திக் பாண்டியா, பஞ்சாப் அணிக்கு செல்லக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.

2027 ம் ஆண்டுக்கான பிரிமீயர் லீக் தொடருக்கான வீரர்கள் பரிமாற்றம் நவம்பர் 17 ம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. இதில் மும்பை அணியின் நட்சத்திர வீரரான ஹர்திக் பாண்டியாவை தங்கள் அணிக்கு கொண்டு வர பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஆலோசனையின்படி பஞ்சாப் அணி முயற்சி செய்தது. இது குறித்து மும்பை அணி நிர்வாகத்துடன் பேச்சு நடத்தியது. ஹர்திக் பாண்டியாவை விட்டுத்தர முன்வந்த மும்பை அணிக்கு அதற்கு பதில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மற்றும் விக்கெட் கீப்பர் விஷ்ணு வினோத் இருவரையும் கேட்டுள்ளது. இதற்கு பஞ்சாப் அணி சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இரு அணிகளும் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement