உலக சுற்றுலா சந்தை கூட்டம் அமைச்சர் பயணம்

புதுச்சேரி: உலக சுற்றுலா சந்தை தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் லண்டன் பயணம் மேற்கொண்டார்.

இதுகுறித்து, சுற்றுலாத்துறை அமைச்சரின் அலுவலக செய்திகுறிப்பு;

லண்டனில் உலக சுற்றுலா சந்தை தொடர்பான கூட்டம் இன்று (3ம் தேதி) துவங்கி 5ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், சுற்றுலா தொழில் சார்ந்த பங்குதாரர்கள் கலந்து கொள்கின்றனர். புதுச்சேரியில், சுற்றுலா மற்றும் அதனை சார்ந்த தொழில்களின் வளர்ச்சியினை மேம்படுத்தவும், மேலும், ஐரோப்பிய நாடுகளில் இருந்து சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த புதுச்சேரி சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது.

அதையடுத்து, இந்த கூட்டத்தில், பங்கேற்ற புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், செயலர் (பொறுப்பு) கிருஷ்ண மோகன் உப்பு, புதுச்சேரி பிராந்தியத்தின் இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் நடராஜன் ஆகியோர் இன்று (நவ.,2) சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement