மண் குவியலில் புதர் பொதுமக்கள் அச்சம்
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் யூனியன், வையப்ப
மலையில் இருந்து மல்லசமுத்திரம் செல்லும் சாலையில், கடந்த ஓராண்டுக்கு முன், நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது சாலையோரத்தில் அள்ளப்பட்ட மண் முறையாக அகற்றப்படாமல் அப்
படியே விட்டுவிட்டனர். இதனால், மண் குவியல்களில் தற்போது புற்கள் முளைத்து புதராக காட்சியளிக்கிறது.
இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் வேறு வழியின்றி, சாலையின் நடுவே நடந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அப்போது, பின்னால் வரும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், புதர்களில் மறைந்திருக்கும் விஷ ஜந்துக்களால் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலையும் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நேரில் ஆய்வு செய்து, சாலையோரம் குவிந்து கிடக்கும் மண்ணையும், புதர்களையும் அகற்றி, பாதசாரிகள் பாதுகாப்பாக நடந்துசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும்
-
டில்லி சவுத் பிளாக்கில் இருந்து இடமாறும் ராணுவம், கடற்படை அலுவலகங்கள்
-
பேட்டரி சேமிப்புக் கொள்கை 2026; தமிழக அரசு வெளியீடு
-
சிக்கிள் செல் அனீமியாவை நொடியில் கண்டறிய எளிய தொழில்நுட்பம்: ஐ.ஐ.டி மும்பை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
-
தேசியப் பாதுகாப்பைப் பேணுவதற்கு தொழில்நுட்பத் திறன்களும் தேவை; ராஜ்நாத் சிங்
-
தீபாவளியன்று எத்தனை மணிக்கு பட்டாசு வெடிக்க வேண்டும்? நேரம் குறித்தது தமிழக அரசு
-
தீபாவளிக்கு பின் 5 தொகுதி இடைத்தேர்தல்; தயாராகும் தேர்தல் கமிஷன்