நாமக்கல் தோட்டக்கலைத்துறை சார்பில் காளான் வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி
நாமக்கல்: நாமக்கல் வட்டார தோட்டக்கலைத்துறை மற்றும் தொழில்நுட்ப மேலாண் முகமை சார்பில், காளான் வளர்ப்பு தொடர்பான ஒருநாள் தொழில்நுட்ப பயிற்சி முகாம், வேளாண் அறிவியல் நிலையத்தில் நடந்தது. நாமக்கல் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் புவனேஸ்வரி தலைமை வகித்து, துறை மூலம் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் செயல்விளக்கம், வெளிமாநில பயிற்சி, மாவட்ட அளவிலான பயிற்சி மற்றும் கண்டுணர் சுற்றுலா குறித்து விளக்கினார். மேலும், காளான் வளர்ப்பில் உள்ள மானிய திட்டங்கள், அதன் மூலம் இளைஞர்கள் தொழில் முனைவோராக உயர்வதற்கான வாய்ப்புகள் பற்றியும் எடுத்துரைத்தார்.
முகாமில், காளான் வளர்ப்பு குறித்த பயிற்சி கையேடு வெளியிடப்பட்டது. நாமக்கல் மாவட்ட தோட்டக்கலை உதவி இயக்குனர் யுவசெந்தில்குமார் வரவேற்றார். நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தோட்டக்கலை வல்லுனர் இளவரசன், காளான் வளர்ப்புக்கு உகந்த ரகங்கள், அவற்றின் வளர்ப்பு குறித்து தொழில்நுட்ப பயிற்சி வழங்கினார். தோட்டக்கலை துறை மூலம் மானியம் பெற்று, சமவெளியில் மொட்டு காளான் வளர்ப்பு, மொட்டு காளான் உற்பத்தி, காளான் வளர்ப்பில் உள்ள நுணுக்கம் குறித்து தொழில் முனைவோருடன் கலந்துரையாடினார்.பேராசிரியர் செந்தாமரை செல்வி, காளான் மதிப்பு கூட்டு பொருட்கள் குறித்தும், வேளாண் அறிவியல் நிலைய தலைவர் சசிகலா, காளான் வளர்ப்புக்கு என, தனியாக ஐந்து நாள் பயிற்சி வழங்கப்படுகிறது என்றும் கூறினர். வட்டார உதவி வேளாண் அலுவலர் கோபிநாத், உதவி தோட்டக்கலை அலுவலர் கோவிந்தராஜ், அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ், தோட்டக்கலை அலுவலர் திவ்யா, முன்னோடி விவசாயிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
பட்டா வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
-
தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு: இபிஎஸ் குற்றச்சாட்டு
-
'ஒர்க் பிரம் பார்க்' திட்டம் துபாயில் அமல்; பூங்காவில் உட்கார்ந்து ஆபீஸ் வேலை!
-
ஜிபிஎஸ் காலர் பொருத்தி இருந்தாலும் விலங்குகளை உடனுக்குடன் கண்டறிவது சிரமம்!
-
இந்தியாவின் முதல் சூரியசக்தி கிராமம்; 141 வீடுகள், 282 கிலோவாட் பயன்பாடு, மின் கட்டணம் பூஜ்ஜியம்!
-
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் விஜய்