ஏ.கே.வி., பள்ளியில் கல்வி கண்காட்சி
மல்லசமுத்திரம்; மல்லசமுத்திரம் ஏ.கே.வி., பப்ளிக் பள்ளி, சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ., மற்றும் ஏ.கே.வி., மெட்ரிக் மேல்நிலை பள்ளிகளில், 'லேர்ன்-2026, வோர்ல்டு ஆப் நாலெட்ஜ்' என்ற தலைப்புகளில் கல்வி கண்காட்சி நடந்தது. பள்ளி தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். தாளாளர் முத்துசாமி, செயலாளர் குழந்தைவேலு, பொருளாளர் பழனிசாமி, கல்வி இயக்குனர்கள், பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் உளவியல் ஆலோசகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் பழனிவேல் வரவேற்றார்.
தொடர்ந்து, தனியார் பள்ளிகளின், மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி பேசுகையில், ''இதுபோன்ற கல்வி கண்காட்சி, மாணவர்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமைவதோடு, எதிர்கால விஞ்ஞானிகளை உருவாக்கும் நிகழ்வாக அமைகிறது,'' என்றார். இக்கண்காட்சியில், சி.பி.எஸ்.இ., பள்ளியின், தமிழ்த்துறை சார்பில் ஐவகை நிலங்கள், பழங்கால பொருட்கள், வில்லுப்பாட்டு, 63 நாயன்மார்கள், தமிழர்களின் பாரம்பரிய கலைகள், தலவரலாறு, ஆங்கிலத்துறையின் மகாபாரத நாடகம் உள்ளிட்டவற்றை தத்ரூபமாக செய்து காட்டியிருந்தனர். இந்த கண்காட்சி, மாணவர்களுடைய பவ்வேறு உள்ளார்ந்த ஆக்கத் திறன்களை வெளிப்படுத்தும் விதமாகவும், பல்வேறு திறன்களை கற்றுக்கொள்ளும் வாய்ப்பாகவும் அமைந்திருந்தது. அனைத்து பெற்றோர்களும், பொதுமக்களும் கண்காட்சியை பார்வையிட்டு, மாணவ, மாணவியரை பாராட்டினர்.
மேலும்
-
பட்டா வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
-
தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு: இபிஎஸ் குற்றச்சாட்டு
-
'ஒர்க் பிரம் பார்க்' திட்டம் துபாயில் அமல்; பூங்காவில் உட்கார்ந்து ஆபீஸ் வேலை!
-
ஜிபிஎஸ் காலர் பொருத்தி இருந்தாலும் விலங்குகளை உடனுக்குடன் கண்டறிவது சிரமம்!
-
இந்தியாவின் முதல் சூரியசக்தி கிராமம்; 141 வீடுகள், 282 கிலோவாட் பயன்பாடு, மின் கட்டணம் பூஜ்ஜியம்!
-
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் விஜய்