ஆரி வேலைப்பாடு பயிற்சி நிறைவு பழங்குடி பெண்களுக்கு சான்றிதழ்

குமாரபாளையம்; தமிழக அரசின் பழங்குடியினர் நலத்துறை மற்றும் அமெரிக்காவின் சியாட்டில் இந்தியா டீம் இணைந்து, கல்வராயன் மலையை சேர்ந்த, உயர்கல்வி பயின்ற பழங்குடியின பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் நோக்கில், ஒரு மாத காலம் நடத்திய ஆரி வேலைப்பாடு மற்றும் தொழில்முனைவோர் பயிற்சியின் நிறைவு விழா கருமந்துறையில் நடந்தது. திட்ட ஒருங்கிணைப்பாளரும், அண்ணாமலை பல்கலை கணினி மற்றும் தகவல் அறிவியல் துறை உதவி பேராசிரியருமான ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தார். பெரியார் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொ) முருகேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வாழ்த்தி பேசினார்.

சேலம் மாவட்ட பழங்குடியினர் நலத்துறை திட்ட அலுவலர் சுகந்தி, பெரியார் பல்கலை உள் தர கட்டுப்பாட்டு மைய துணை இயக்குனர் மாதேஸ்வரன் பங்கேற்று, ஒரு மாத கால பயிற்சியை நிறைவு செய்த, 30 பழங்குடியின பெண்களுக்கு சான்றிதழ் வழங்கினர். ஏற்பாடுகளை குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லுாரி பேராசிரியர் ஜெயபிரகாஷ் செய்திருந்தார்.

Advertisement