எம்.பி.பி.எஸ்., மாணவர்களுக்கு அமைச்சர் வெள்ளை அங்கி வழங்கல்
நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், முதலாமாண்டு எம்.பி.பி.எஸ்., மாணவர்கள், 150 பேருக்கு வெள்ளை அங்கி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், மாணவ, மாணவியருக்கு வெள்ளை அங்கி வழங்கி பேசியதாவது: தமிழகத்தின் மருத்துவத்துறை, இந்தியாவிலேயே என்றும் முதன்மையான துறையாக திகழ்ந்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், நவீன மருத்துவ கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நம் மாநிலத்தில், மருத்துவ கல்வி படிக்கும் மாணவ, மாணவியர், இங்கேயே உங்கள் மருத்துவ பணியை தொடங்கி, மக்களுக்கு போற்றுதலுக்குரிய மருத்துவ சேவையை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, அமைச்சர் தலைமையில், மருத்துவ மாணவர்கள் அனைவரும் இந்திய மருத்துவ சங்க உறுதிமொழியை ஏற்றனர்.
எம்.எல்.ஏ.,க்கள் நாம க்கல் திலீப், சேந்தமங்கலம் சந்திரசேகர், அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் முருகலட்சுமி, நலப்பணிகள் இணை இயக்குனர் எழில், மாவட்ட நல அலுவலர் பூங்கொடி, கல்லுாரி துணை முதல்வர் குமுதா, கண்காணிப்பாளர் குண
சேகரன், நிலைய மருத்துவ அலுவலர் லீலாதரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
பட்டா வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
-
தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு: இபிஎஸ் குற்றச்சாட்டு
-
'ஒர்க் பிரம் பார்க்' திட்டம் துபாயில் அமல்; பூங்காவில் உட்கார்ந்து ஆபீஸ் வேலை!
-
ஜிபிஎஸ் காலர் பொருத்தி இருந்தாலும் விலங்குகளை உடனுக்குடன் கண்டறிவது சிரமம்!
-
இந்தியாவின் முதல் சூரியசக்தி கிராமம்; 141 வீடுகள், 282 கிலோவாட் பயன்பாடு, மின் கட்டணம் பூஜ்ஜியம்!
-
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் விஜய்