வறட்சிச் சூழலில் விவசாயிகளுக்கு அரசு உறுதுணையாக இருக்கிறது; பிரதமர் மோடி

1

புதுடில்லி: ரூ.21,800 கோடி மதிப்பிலான புனே மெட்ரோ திட்டங்களை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக துவங்கி வைத்தார்.

அவர் பேசியதாவது: மஹாராஷ்டிராவில் நிலவும் வறட்சிக்கு மத்தியில், மத்திய அரசு இந்த நெருக்கடியான காலகட்டத்தில் விவசாயிகளுக்கு உறுதுணையாக நிற்கும். அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது. பண்டிகைக் காலத்தில் விவசாயிகளுக்கு ஆதரவளிக்குமாறு நாட்டு மக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம். நாங்கள் அனைவரும் விவசாயிகளுடன் இருக்கிறோம்.

மாநில அரசும் முன்கூட்டியே உதவி வழங்கியுள்ளது. இந்தக் கடினமான நேரத்தில், தேஜ அரசு முழு உணர்வுடன் மஹாராஷ்டிராவில் உள்ள ஒவ்வொரு விவசாயியுடனும் துணை நிற்கும். தீபாவளி கொண்டாட்டங்கள் விவசாயிகளின் வீடுகளையும் சென்றடைவதை நாம் உறுதி செய்ய வேண்டும். இதுவும் நமது சமூகப் பொறுப்புதான்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள், விவசாயிகள் மற்றும் கிராமங்களில் வசிக்கும் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை நாம் மறந்துவிடக் கூடாது. இந்த நெருக்கடியை நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்வோம். வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் விவசாயிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

அவர்களை மேம்படுத்துவதற்காக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement