போடி– தேவாரம் ரோட்டில் சென்டர் மீடியனாக தடுப்புகள் அமைப்பு
போடி: போடி பஸ்ஸ்டாண்டில் இருந்து தேவாரம் செல்லும் ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்கவும், சிரமம் இன்றி வாகனங்கள் செல்ல சென்டர் மீடியனாக இரும்பு தடுப்புகளை போக்குவரத்து போலீசார் அமைத்துள்ளனர்.
இந்த ரோட்டில் பள்ளி, கோயில்கள், ஆர்.ஐ., ஆபீஸ் ரோட்டில் மருத்துவமனை, ஓட்டல், விடுதிகள் அமைந்து உள்ளன. இப்பகுதி எப்போதும் வாகன போக்குவரத்து இருக்கும். பஸ் ஸ்டாண்டில் இருந்து தேவாரம் செல்லும் நெடுஞ்சாலைத்துறை மெயின் ரோட்டில் வரிசையாக ஆட்டோ, பழக்கடைகள் அமைத்து ஆக்கிரமித்து இருந்தனர்.
இதனால் பஸ்ஸ்டாண்டில் இருந்து தேவாரம் மார்க்கமாக செல்லும் பஸ்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், டூவீலர் உள்ளிட்டவைகள் கடந்து செல்ல சிரமம் ஏற்பட்டது. வேகமாக வரும் வாகனங்கள் வளைவில் திரும்பும் போது விபத்திற்குள்ளாகின.
போக்குவரத்திற்கு இடையூறு தவிர்க்கும் வகையில் பஸ், கார் உள்ளிட்ட வாகனங் கள் எளிதாக வந்து செல்ல ரோட்டின் மையத்தில் சென்டர் மீடியனாக இரும்பு தடுப்புகளை போக்குவரத்து போலீசார் அமைத்துள்ளனர்.
ஆனால் பஸ் ஸ்டாண்டை ஆக்கிரமித்து உள்ள வாகனங்களை அகற்றவும், பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் பிளாட்பாரம், தற்காலிக கடைகளும், கட்சியினர் விளம்பர பதாகைகள், பிளக்ஸ், பேனர்கள் வைப்பது தொடர்கிறது. இதனையும் அகற்ற போக்குவரத்து போலீசார் முன் வர வேண்டும்.
மேலும்
-
பிரிட்டன் கோர்ட் வழங்கிய விவாகரத்து செல்லாது இருதார மண வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி
-
சிறுமி பலாத்தார வழக்கில் ‘மாஜி’ அமைச்சர் கைது மாலத்தீவு போலீஸ் அதிரடி
-
செய்திகள் சில வரிகளில்
-
கிரைம் கார்னர்: பெங்களூரு
-
முன்னறிவிப்பின்றி 2 ஏக்கர் பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பு
-
ரூ.35 கோடியில் பிரமாண்ட வளாகம் சிவசங்கரப்பா திட்டம்; ஈ.டி., தகவல்