முதல்வர் குறித்து அவதுாறு பேசிய பெண் கவுன்சிலருக்கு நிபந்தனை முன்ஜாமின்
சென்னை: முதல்வர் விஜய் குறித்து அவதுாறாக பேசிய வழக்கில், தி.மு.க., பெண் கவுன்சிலர் சுதா தீனதயாளனுக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தி.மு.க.,வின் முப்பெரும் விழா, சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், அக்., 7ல் நடந்தது. இதில், சென்னை மாநகராட்சியின் 95வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சுதா தீனதயாளன், தமிழக முதல்வர் விஜய் குறித்து, ஒருமையில் அவதுாறாகவும் பேசினார்.
த.வெ.க., நிர்வாகி உதயகுமார், எஸ்பிளனேடு காவல் நிலையத்தில், இதுகுறித்து புகார் அளித்தார்.
கவுன்சிலர் சுதா தீனதயாளன், அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீது, மூன்று பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. முன்ஜாமின் கேட்டு, உயர் நீதிமன்றத்தில் சுதா மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, எஸ்பிளனேட் காவல் நிலையத்தில் தினமும் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும்
-
தலைக்கு 5 ஆயிரம் டாலர் வாக்குறுதி அளித்தும் பயனில்லை; டிரம்ப் கட்சி தோல்விக்கான காரணங்கள் இதோ!
-
லிப்டில் சிக்கிய மாற்றுத்திறனாளி ஆப்ரேட்டர் மீட்பு
-
சாப்ட்வேர் பயிற்சி
-
வக்கீலை தாக்கியவரை கைது செய்ய வலியுறுத்தி வக்கீல்கள் சாலை மறியல்
-
தூய்மை பணியாளர் பணியின்போது உயிரிழப்பு
-
தனியார் லேஅவுட்களை குறி வைத்து சுற்றித்திரியும் கொள்ளை கும்பல்