லிப்டில் சிக்கிய மாற்றுத்திறனாளி ஆப்ரேட்டர் மீட்பு

அரியலுார்: பெரம்பலுார் மாவட்டம், மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த், 35, மாற்றுத்திறனாளி. இவர், அரியலுார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், லிப்ட் ஆப்பரேட்டராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை 10;00 மணியளவில், பணியில் இருந்த ஆனந்த் நான்காவது மாடிக்கு லிப்டில் சென்றபோது, திடீரென லிப்ட் பழுதாகி நின்றது. இதில், ஆனந்த் லிப்டில் சிக்கினார்.

இதுகுறித்து, அரியலுார் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அரியலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள், லிப்டின் கதவுகளை திறந்து, ஆனந்தை பத்திரமாக மீட்டனர்.

Advertisement