தூய்மை பணியாளர் பணியின்போது உயிரிழப்பு

புதுக்கோட்டை: கறம்பக்குடி பகுதியை சேர்ந்தவர் புஸ்பநாதன், 64 என்பவர் வேளாண்மை துறை அலுவலகத்தில் தூய்மை பணியாளராக இருந்தார். இவர் வேளாண்மை துறை குடோனில் தூய்மை பணி செய்த போது மர்மமான முறையில் உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வேளாண்மை துறை அலுவலகத்தில் தூய்மை பணி செய்து வந்த புஸ்பநாதன் என்பவர் வேளாண்மை துறை அலுவலகம் அருகே உள்ள உரம், பூச்சி மருந்து குடோனில் நேற்று தூய்மை பணி செய்து வந்த போது, மர்மமான முறையில் உயிரிழந்தார்.

கறம்பக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்கின்றனர். இதனிடையே, உயிரிழப்பிற்கு நீதி கேட்டு புஸ்பநாதன், உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி, மறியலை கைவிடச் செய்தனர்.

Advertisement